அவிநாசி;பக்தர்கள் தரிசனத்துக்கு தடை இருப்பதால், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில், செயல் அலுவலர் மற்றும் சிவாச்சார்யார்கள், அம்மையப்பரை தோளில் சுமந்து சென்றனர்.கொரோன வைரஸ் தொற்றால், கோவில்களில் பக்தர்கள் தரிசனம், 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று சனி மகா பிரதோஷம் என்பதால், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், உட்புறமாக தாழிடப்பட்டு, நந்தியம்பெருமான், மூலவர், பிரதோஷ நாயகருக்கு மட்டும் அபிேஷகம், அலங்காரபூஜைகள் நடந்தது.அவிநாசியில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ காலத்தில், அபிேஷக மற்றும் அலங்கார பூஜைகள் வழக்கம் போல் நடந்தன.மங்கல வாத்தியத்துடன், அவிநாசிலிங்கேஸ்வரரும், கருணாம்பிகை அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். பஞ்சவர்ண குடை பிடித்த ரிஷப வாகனத்தில் அமர்ந்த பிரதோஷ நாயகர், நாயகியை, கோவில் செயல் அலுவலர் லோகநாதன், சிவாச்சார்யார்கள், சுமந்து, உள்பிரகார உலாவாக சென்றனர்.அவிநாசி கோவில் வரலாற்றில், முதன்முறையாக பக்தர்கள் இல்லாமல், பிரதோஷ வழிபாடு நடப்பது இதுவே முதன்முறை.அதிலும், அம்மையப்பரை, செயல் அலுவலர், சிவாச்சார்யார்கள் தோளில் சுமந்து பிரகார உலா சென் றதை அறிந்த பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.