பதிவு செய்த நாள்
23
மார்
2020
03:03
மதுரை: கிரகங்களின் மாற்றங்களால் தலைகாட்டும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பிரச்னைகள் ஏப்.14ல் முழுமையாக நீங்கி, ஆரோக்கிய சூழல் திரும்பும், என மதுரை திருவாப்புடையார் கோயில் ரிக்வேத கனபாடிகள் மகன் ஜோதிடர் ஐயப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: 12 ராசிகளில் தனுசு ராசியில் 45 நாட்களாக செவ்வாய், சனி, கேது, குரு சேர்ந்து இருக்கின்றனர். பொதுவாக செவ்வாய், சனி சேர்ந்தால் விபத்து, வெள்ளம், போர் அதிகம் ஏற்படும். கேது சேர்க்கையால் தற்போது வைரஸ் தாக்குகிறது. மார்ச் 22 இரவு 2:00 மணிக்கு தனுசு ராசியில் இருக்கும் செவ்வாய், மகர ராசிக்கு செல்கிறார். மார்ச் 28ல் தனுசு ராசியில் இருக்கும் குரு, மகர ராசிக்கு அதிச்சாரத்தில் செல்கிறார். சூரியன் ஏப்.,14ல் மேஷத்திற்கு வருகிறார். எனவே மார்ச் 22 இரவு 2:00 மணிக்கு மேல் ஒரு முன்னேற்றமும், மார்ச் 28ல் குரு மாறுவதால் ஒரு முன்னேற்றமும் ஏற்படும். ஏப்., 14ல் சூரியன் மாற்றத்தால் கொரோனா உள்ளிட்ட பிரச்னைகள் முழுமையாக நீங்கி, ஆரோக்கிய சூழல் திரும்பும். ஏப்., முதல் ஜூன் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கொரோனா வைரஸ் தாக்கம் குறையும், செப்.1ல் தனுசில் இருந்து கேது விருச்சிகம் செல்வதால் இது போன்ற பிரச்னைகள் முற்றிலும் தீர்ந்து விடும். இதனால் இதுபோன்ற தாக்கங்களை கண்டு பீதியாகாமல் இறை நம்பிக்கையுடன் நாம் எதிர்கொள்ள வேண்டும், என்றார்.