பதிவு செய்த நாள்
23
மார்
2020
04:03
ராமேஸ்வரம் : கொரோனா எச்சரிக் கையை மீறி ராமேஸ் வரத்தில் நடந்த மத பிரசார கூட்டத்தை தடை செய்து அங்கிருந் தவர்களை தாசில்தார் வெளியேற்றினார். கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி, கோயில்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. இன்று வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற வேண்டாம், என பிரதமர் மோடி வலியுறுத்திய நிலையில், நேற்று ராமேஸ்வரம் தம்பியான் கொல்லை தெருவில் கிறிஸ்தவ சபை கட்டடத்தில் கொரோனா பரவாமல் மக்களை காப்போம் என பிரார்த்தனை கூட்டம் நடத்தினர். இதனால் அத்தெருவில் பொதுத் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு இடையூறாகவும், பிரதமர் வேண்டு கோளை மீறி இன்றும் இக்கூட்டம் நடக்க இருந்தது. இதற்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி, நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்த ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜபார், டவுன் போலீஸ் எஸ்.ஐ., சதீஸ் மற்றும் போலீசார் பிரச்சார கூட்டத்தில் பங்கேற் றவர்களை வெளியேற்றி, மார்ச் 31 வரை கூட்டம் நடத்த கூடாது என அறிவுறுத்தினர். அனுமதியின்றி ஒலிபெருக்கியில் மத பிரசாரம் செய்வதால், குழந்தைகள் படிக்கவும், முதியவர்கள் ஒய் வெடுக்கவும் முடியாமல் அவதிப்படுவதாக மக்கள் போலீசாரிடம் புகார் செய்தனர்.