Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவைரவன்பட்டி ... திருவண்ணாமலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிரிவலம் வந்து வழிபாடு திருவண்ணாமலையில் இந்திய கிரிக்கெட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூபல்லாக்கில் நகர்வலம் வந்த நத்தம் மாரியம்மன்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூபல்லாக்கில் நகர்வலம் வந்த நத்தம் மாரியம்மன்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

13 மார்
2026
07:03

நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா கடந்த பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கரந்த மலை கன்னிமார் தீர்த்தத்தில் நீராடி சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பூப்பல்லாக்கு திருவிழா நேற்று இரவு நடந்தது. இதில் அம்மன் குளத்திலிருந்து மல்லிகை, முல்லை, ரோஜா, சம்மங்கி, துளசி, அரளி, கனகாம்பரம், செவ்வந்தி, உள்ளிட்ட பல்வேறு வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்க சிறப்பு அலங்கார பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன், வாண வேடிக்கையுடன் அம்மன் புறப்பாடு தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக 20-க்கும் மேற்பட்ட மண்டகபடிகளில் மாரியம்மன் பூப்பல்லாக்கில் விடிய விடிய எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் இன்று காலையில் அம்மன் கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேர்ந்தார்.அப்போது மூலவருக்கும், உற்சவருக்கும், சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த பூப்பல்லாக்குடன் திருவிழா நிறைவு பெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar