பதிவு செய்த நாள்
24
மார்
2020
06:03
பெ.நா.பாளையம்: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள கோயில்கள் மூடப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள் இம்மாதம், 31ம் தேதி வரை மூடப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, வழிபாட்டு தலங்களில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்ததால், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் அன்றாட பூஜைகள் மட்டும் நடைபெறும் எனவும், கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை எனவும், இந்து சமய அறநிலையத் துறை அறிவித்தது. இதையொட்டி பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலையில் உள்ள அருள்மிகு அரங்கநாதர் கோவில், பெரியநாயக்கன்பாளையத்தில் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் ஆலயம், வீரபாண்டி மாரியம்மன் கோவில், வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோயில் வில்லீஸ்வரர் கோயில் உள்ளிட்டவை இம்மாதம், 31ஆம் தேதி வரை அடைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.