திருவெண்ணெய்நல்லுார் : மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் திருவிழா நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் வருடாந்திரம் பங்குனி மாதம் 12 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா நாளை 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 9ம் நாளான ஏப்ரல் 5ம் தேதி தேர் உற்சவம் நடைபெறுவதாக இருந்தது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.தற்போது கூட்டம் கூடுவதற்கு தமிழக அரசு 144 தடை விதித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக அரசுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் இந்த ஆண்டு கோவில் திருவிழாவை நிறுத்துவது என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.