காரைக்கால்; திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், உலக மக்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு, மக்கள் கூட்டத்தை தவிர்க்க அரசின் உத்தரவின் பேரில்பரிகார ஸ்தலமான திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக மாவட்ட நிர்வாக உத்தரவின்பேரில் கோவில் நடை அடைக்கப்பட்டது.
இருப்பினும், கோவிலில் தினசரி ஆறுகால பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காத்திடவேண்டி நேற்று திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் மற்றும் சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தியாகராஜர் சன்னதியில் உலக மக்கள் நன்மை வேண்டியும் மற்றும் கொரோனா பாதிப்பு நீங்க வேண்டியும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பாரிஜாத மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.