Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) பணிந்தாலும் வெற்றி உங்களுக்கே! மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: அள்ளித் தருவார் ஒன்பதாம் இடத்து குரு ரிஷபம்: அள்ளித் தருவார் ஒன்பதாம் ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2020 முதல் 13.4. 2021 வரை)
மேஷம்: பொருள் சேர்ப்பீர்கள்! புகழோடு வாழ்வீர்கள்!
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2020
17:15

பெற்றோர் மீது அன்பு கொண்ட மேஷ ராசி அன்பர்களே!


இந்த சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குரு, சனி பார்வைகளால் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். உற்சாகமாக செயல்படுவீர்கள். மனதில் இருந்த உளைச்சல் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். அவர்களால் பணஉதவி கிடைக்கும்.  ஜூலை 7க்கு பிறகு குருவால்  நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பொன், பொருள் சேரும். புகழுடன் வாழலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. இருப்பினும் ஜூலை 7 வரை செலவு அதிகரிக்கும். ஆக.31க்கு பிறகு பெரியோர் ஆலோசனையை ஏற்பது  நல்லது. எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கை தேவை. சமூகத்தில் மதிப்பு, மரியாதை சீராகவே இருக்கும். கணவன், மனைவி இடையே பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் தேவை. ராகுவால் வெளிநாட்டு பயணம் செல்ல வாய்ப்புண்டு. பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். பொருளாதார இழப்பும் ஏற்படலாம். கேதுவால்  உடல்நலக் குறைவு வரலாம்.

பெண்கள் நல்ல வளத்தோடு மன நிம்மதியும் காண்பர். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். ஆக.31க்கு பிறகு சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வெளியே பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண் உளைச்சலுக்கு ஆளாவீர்கள். உடல்நிலை அவ்வப்போது அதிருப்தியளிக்கும்.  ஆக.31க்கு பிறகு பூரண குணமடைவீர்கள்.   

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ராகு காரிய அனுகூலத்தையும், நற்சுகத்தையும், பொருளாதார வளத்தையும்,  மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தந்து கொண்டிருக்கிறார் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். மேலும் சனிபகவானின் 10-ம் இடத்துப் பார்வையால் இடையூறுகள் மறையும். நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். ஜூலை 7 முதல்  நவ.13 வரை அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில்கள் நல்ல வளர்ச்சி அடையும்.
* வியாபாரிகள்  ஜூலை 7க்கு பிறகு வளர்ச்சி காண்பர். உங்கள் ஆற்றல் மேம்படும். சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்துவர்.அரசு வகையில் இருந்த  அனுகூலமற்ற போக்கு மறையும். சிறுதொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவர். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் காண்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட வியாபாரம் தழைத்து ஓங்கும்.
* தரகு, கமிஷன் தொழிலில் ஜூலை 7 முதல்  நவ.13-ந் தேதி உங்கள் திறைமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும்.
* அரசு பணியாளர்கள் நவ.13 வரை பணியில் மேம்பாடு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
 * தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஜூலை7க்கு பிறகு வேலைப்பளு குறையும். பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு இந்த காலத்தில் வேலை கிடைக்க வாய்ப்புண்டு.
* ஐ.டி., துறையினர் ஜூலை 7க்கு பிறகு உயர்ந்த நிலையை எட்டிப் பிடிப்பர். சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். வேலையில் மனதிருப்தி உண்டாகும். மேலதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர்.
* வக்கீல்கள்  தொழிலில் சிறந்து விளங்குவர். ஜூலை7 க்கு பிறகு எழுத்தாளர்கள் நல்ல புகழை காண வாய்ப்புண்டு.
* ஆசிரியர்களுக்கு ஜூலை 7 முதல் நவ.13 வரை வேலையில் ஆர்வம் பிறக்கும் சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.
* அரசியல்வாதிகள் நல்ல வசதியுடன் இருப்பர். எதிர் பார்த்த பதவி கிடைக்கும்.
* பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு வந்து சேரும். சிலருக்கு விருது, ரொக்கப்பரிசு கிடைக்கப் பெறலாம்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும், பெருமையும் கிடைக்க பெறுவர்.
* விவசாயிகள் நவீன வேளாண்மையை கையாண்டு நல்ல வருமானம் காணலாம். மஞ்சள், கரும்பு, எள், பனை போன்ற பயிர் வகைகளில்  நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கலாம். ஜூலை 7 முதல்  நவ.13 வரை வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கூலி வேலைகள் செய்பவர்கள் மன நிம்மதியுடன் காணப்படுவர். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஜூலை 7 முதல்  நவ.13 வரை சிறப்பான பலன் காணலாம். மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புண்டு.

சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு சனிபகவானால் முயற்சிகளில் சிறுதடைகள் வரலாம், எதிரிகளால் இடையூறு தலைதுாக்கும், பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். டிச.26க்கு பிறகு  வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். ஆனால் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.
* வியாபாரிகள் ஆக.31க்கு பிறகு வியாபார விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்வர். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது. அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமுடன் பழகவும். நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு நவ.13க்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
* ஐ.டி., துறையினர் ஆக.31க்கு பிறகு மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் வீண் குழப்பத்தால் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பர். உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.
* மருத்துவர்களுக்கு ஆக.31க்கு பிறகு வேலையில் அலைச்சலும், பளுவும் இருக்கும். சக ஊழியர்களிடம் இருந்து  உதவியை எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றம் வரலாம்.
* வக்கீல்கள் டிச.26 க்கு பிறகு தாங்கள் நடத்தும் வழக்குகளில் கவனமாக இருக்கவும். அதே நேரம் உங்கள் உழைப்பு வீணாகாது. இப்போது இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் அதற்கான பலன் கிடைக்கவே செய்யும்.
* ஆசிரியர்கள் நவ.13 க்கு பிறகு வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். அதே நேரம் உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். தீவிர முயற்சியின் பேரில் கோரிக்கைகள் நிறைவேறும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.
* அரசு பணியாளர்கள் ஆக.31க்கு பிறகு கடந்த காலத்தை போல பலனை எதிர்ப்பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் கூடும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆக.31க்கு பிறகு பணவிரயம் ஏற்படலாம். ஆனால் சம்பள உயர்வு பதவி உயர்வுக்கு தடங்கல் இருக்காது.
* அரசியல்வாதிகள் ஆக.31க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
* கலைஞர்கள் ஆக. 31க்கு பிறகு புதிய ஒப்பந்தத்திற்காக விடாமுயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள்  நவ.13க்கு பிறகு கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம்

* விநாயகர், அனுமன் கோயில் வழிபாடு
* சனிக்கிழமையில்சனீஸ்வரருக்கு எள்தீபம்
* வியாழனன்று கொண்டைக்கடலை தானம்.

 
மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2020 முதல் 13.4. 2021 வரை) »
temple
திட்டமிட்டு செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குருவால் மகிழ்ச்சி ... மேலும்
 
temple
மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்கும் மிதுன ராசி அன்பர்களே! சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் மன ... மேலும்
 
temple
கடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டு சிறப்பானதாக அமையும். காரணம் சனி, கேது ... மேலும்
 
temple
பொன்மனம் படைத்த சிம்ம ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டு ராகு சாதமாக இருக்கும் நிலையில் பிறக்கிறது. ... மேலும்
 
temple
கருணை மனம் படைத்த கன்னி ராசி அன்பர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் குருபகவான் குதுாகலத்தைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.