சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக, தீயணைப்பு துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சென்ற, லட்சுமி நரசிம்மர் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள, 32 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு, நேற்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மஞ்சள் நீர் கலந்த கிருமி நாசினியை தீயணைப்பு துறையினர் தெளித்தனர்.