மதுரை : மதுரை திருப்பாலையில் டாக்டர் ரமணி சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்க சத்ரு சம்ஹார கிருமி நாசய ஹோமம் நடந்தது.அவர் கூறியதாவது: இறை நம்பிக்கை நமக்கு அதிகளவில் இருந்தால் தான் நோயின் தீவிரத்தை குறைக்க முடியும். அதனால் நேற்று பகல் 11:55 மணிக்கு பகுதி மக்கள் நலன் கருதி இந்த ஹோமத்தை செய்தேன். ஹோம குண்டத்தில் வெட்டிவேர், மிளகு, கடுகு உள்ளிட்ட 13 மூலிகை பொருட்களை போட்டு ஒரு மணி நேரம் பூஜை செய்தேன். ஊரடங்கால் மக்கள் யாரும் பங்கேற்க முடியாது என்பதற்காக வீட்டு வாசலில் ஹோமம் செய்தேன். இதில் இருந்து கிளம்பிய புகை நீர், நிலம், காற்று, ஆகாயத்தில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் என்பது நம்பிக்கை என்றார்..