திருக்கோவிலூர்: ஊரடங்கு உத்தரவு காரணமாக திருக்கோவிலூரில் பிரசித்திபெற்ற கோவில்கள் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், வீரட்டானேஸ்வரர் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களில் வழக்கமாக தமிழ் புத்தாண்டு தினத்தில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தவர்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், நேற்று புத்தாண்டையொட்டி, நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் உலகளந்த பெருமாள் கோவிலில், தேகளீசபெருமாள் கருடசேவை உள்ளிட்ட எந்த சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. பக்தர்கள் யாரும் இல்லாமல் பட்டாச்சாரியர்கள் மட்டுமே பூஜைகளை செய்தனர்.அதேபோல் வீரட்டானேஸ்வரர் கோவிலிலும் சிவாச்சாரியர்கள் மட்டுமே வழக்கமான பூஜைகளில் ஈடுபட்டனர். இதனால், கோவில்கள் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.