அஸ்மா பின்த் உமைஸ் என்பவர் ஒருமுறை நாயகத்தின் வீட்டுக்குச் சென்ற போது, அவர் குவளையில் பால் அருந்திக் கொண்டிருந்தார். தேவையான அளவுக்கு குடித்த பிறகும் பால் மீதியிருந்தது. அதை தன் மனைவி குடிப்பதற்காக கொடுத்தார். பசித்தாலும் கூட, ‘‘நான் பாலை விரும்பவில்லை’’ என மறுத்தார் அவர். மற்றவர் முன்னிலையில் ஒப்புக்காக பாலை மறுப்பதை அறிந்து,‘‘ பசியையும், பொய்யையும் ஒன்று சேர்த்து குழப்பிக் கொள்ள வேண்டாம்’’ என்று அறிவுரை கூறினார். ஒரு விஷயத்தை தெரிவிக்கும் போது, அதை கேட்டவர்கள் உண்மை என நம்பும் நிலையில் அது பொய்யாக இருந்தால் அதுவே நம்பிக்கை துரோகம். அதனால் ஒருபோதும் பொய் பேசுவது கூடாது’’ என்றார். ..............