மனிதன் தன் மனைவி, குழந்தைகள், அண்டை வீட்டார், உறவினர் என பலரோடும் உறவாட வேண்டியிருக்கிறது. அப்போது சில நேரங்களில் தவறுகள் செய்ய நேர்ந்து பாவத்திற்கு ஆளாகிறான். தொழிலில் ஈடுபடும் போது லாப நோக்கிலும் தவறு செய்ய வாய்ப்புண்டு. இதனால் ஏற்படும் பாவங்களைப் போக்க தொழுகை, தர்மம் இவையே தக்க பரிகாரங்கள். இவற்றைச் செய்தால் இறைவனிடம் மன்னிப்பு கிடைக்கும். ஆனால் ஒரு நிபந்தனை. வேண்டும் என்றே பாவத்தை தெரிந்தே செய்திருப்பது கூடாது. தவறுதலாக பாவம் நிகழ்ந்திருந்தால் தொழுகையும், தர்மமும் அதைப் போக்கும்.