சிவபெருமானுக்கு அபிஷேகப்பிரியர் என்ற சிறப்புப் பெயர் உண்டு. ஒவ்வொரு மாத பவுர்ணமியின் போதும் சிவாலயங்களில் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகமும், மாசி பவுர்ணமி அபிஷேகமும் சிறப்பானவை. திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயிலில், மாசியில் நடைபெறும் அபிஷேகத்தின் போது நெய்யில் நனைத்த கம்பளி போர்வை ஒன்றினால் சிவலிங்கத்தைச் சுற்றிவிடுவர். இந்த அபிஷேகத்தைத் தரிசித்தவர்கள் நோய்கள் நீங்கி குணம் பெறுவர் என்பது ஐதீகம்.