சுவாமியை கும்பிடக்கூடாத நேரம் என்ற ஒன்றும் இருக்கிறது. எது தெரியுமா? விழாக்காலங்களில் உற்சவர் வீதியுலா வரும் போது, கோயிலுக்குள் சென்று மூலவரையும், பரிவார தெய்வங்களையும் வணங்குவதைத் தவிர்க்கலாம். இந்நேரத்தில் மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம் என்பதால், உள்ளே சென்று வணங்கினாலும் பயனில்லை என்பர். திருப்பதி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளான கருடசேவையின் போது, சுவாமி உலா வரும் வரை நடை அடைக்கப்பட்டிருந்தது ஒரு காலத்தில்! இப்போது கூட்டம் காரணமாக சிறிதுநேரம் மட்டும் தரிசனத்தை நிறுத்தி வைக்கிறார்கள். நைவேத்யத்திற்காக திரையிட்டிருக்கும் போது, உள்ளே உற்றுப்பார்த்து வணங்கக்கூடாது. வலம் வரவும் கூடாது.