இரண்டு முகங்களுடன், ஆடு வாகனத்தில் அமர்ந்துள்ள அக்னி பகவானை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள கீரனூர் சிவலோகநாதர் கோயிலில் தரிசிக்கலாம். ஒரு சாபத்தால் கிளி வடிவம் பெற்ற அக்னி பகவான், இங்கு தான் சுயரூபம் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. ராஜராஜசோழன் கட்டிய இந்தக் கோயிலில் கலையம்சம் மிக்கதாக இந்தச் சிலை வடிக்கப்பட்டுள்ளது. தொடர் ஜலதோஷம், குளிர் சார்ந்த நோய்கள், வெப்ப நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இவரை வணங்கி குணமடையலாம் என்பது நம்பிக்கை.