ஒருமுறை இரவு நேரத்தில் திருவொற்றியூர் வடிவுடைஅம்பிகையைத் தரிசனம் செய்யச் சென்றிருந்தார். வழிபாடு செய்துவிட்டு வர இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பதை அறிந்த வள்ளலார் கதவைத் தட்ட மனமில்லாமல் திண்ணையிலேயே படுத்துக் கொண்டார். பசியும் களைப்பும் அதிகமாக இருந்ததால் உறக்கம் வரவில்லை. அப்போது அவரது அண்ணியின் வடிவில் வடிவுடைநாயகியே வந்து தாமரை இலையில் வெண்பொங்கல் கொடுத்துவிட்டு மறைந்தார். வள்ளலாருக்கு அமுதூட்டிய அம்பிகை தாயாக, சகோதரியாக வந்ததாகவும் சொல்வர். ""பசியைப் போக்கி அருள்புரிந்த அன்னையே என்று இந்நிகழ்ச்சி பற்றி வள்ளலார் பாடியுள்ளார்.