காளஹஸ்தி செங்கல்வராய சுவாமி கோயிலில் வசந்தோற்சவ சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2025 10:07
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய சுவாமியின் வருடாந்திர ஆடிக் கிருத்திகை பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளில் கோயில் அருகில் உள்ள ஜல விநாயகர் கோயில் அருகே உள்ள வசந்த உற்சவ மண்டபத்தில் வசந்தோற்சவம் நடைபெற்றது. முன்னதாக கோயில் அர்ச்சகர்கள் வசந்த உற்சவ மண்டபத்தில் எழுந்தருளிய செங்கல்வராய சுவாமி உற்சவ மூர்த்திகளுக்கு பல்வேறு சுகந்த திரவியங்களால் பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், இளநீர், மற்றும் பஞ்சாமிர்தம் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து, தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள யாகசாலையில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய சுவாமிக்கு கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.