முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆடி ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2025 12:07
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆடி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 6:00 மணிக்கு உற்சவமூர்த்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானம், கிராமத்தினர் செய்திருந்தனர்.