புதுச்சேரி; முத்தியால்பேட்டை பொன்னுமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று நடந்தது. முத்தியால்பேட்டை பொன்னுமாரியம்மன் கோவிலில் 90ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 16ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினமும் காலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று மதியம் 12:00 மணிக்கு மஞ்சள் இடித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து, 2:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் உள்ளிட்ட திரளான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.