விழுப்புரம்:விழுப்புரம் பீமநாயக்கன் தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம் நடந்தது.சித்ரா பவுர்ணமியையொட்டி விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடில் உள்ள பீமநாயக்கன் தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. பின் மாலை 6 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டு பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் வழங்கினர்.