திண்டிவனம்:மோழியனூர் அக்கரை காளியம்மன் கோவிலில் 108 பால் குட ஊர்வலம் நடந்தது.திண்டிவனம் வட்டம் நெடிமோழியனூர் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றங்கரையில் அக்கரை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 16ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டது. இதில் 108 பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், காளி வேடம் மற்றும் தீச் சட்டி ஏந்திய பக்தர்கள் ஊர்வலமாக அக்கரை காளியம்மன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து மூலவருக்கு 108 பால் குட அபிஷேகம் நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு, அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், ஜோதி தரிசனமும் நடந்தது.