இறைவனே உணவளிக்கிறான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் ஒரு ஞானி. அதை மறுக்கும் இளைஞன் ஒருவன், “ஞானியே! இறைவன் உணவு தருவதாகச் சொல்கிறீர்களே! என்னைப் போன்ற சிலர் அல்லவா உங்களுக்கு உணவு தருகின்றனர். மக்களிடம் வாங்கிச் சாப்பிடும் தாங்கள் இறைவன் தருவதாகச் சொல்வது நன்றி மறந்த செயல் ஆகாதா? என்றான். இல்லை! எனக்கு மட்டுமல்ல, உமக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் இறைவனே உணவளிக்கிறான் என்றார்.
“அப்படியானால் நான் ஒரு அறையில் உங்களை அடைக்கிறேன். இறைவன் உணவு தருகிறானா என பார்ப்போம் என்றான் இளைஞன்.“தம்பி! நீ புதிதாக என்னை அடைக்க வேண்டியதில்லை. நான் ஏற்கனவே இரு ஆண்டுகள் வரை என் வீட்டிலேயே சிறைப் பட்டுக் கிடந்தேன். அப்போது என்னால் நடக்க முடியாது. இருந்தாலும் என் வாய்க்கே உணவு வந்தது. அப்போது நான் சிறுகுழந்தையாக இருந்தேன் என்றார்.
ஆம்... குழந்தையாக இருக்கும் போது நம் அனைவருக்கும் தாயாக தாலாட்டி சீராட்டி பாலுாட்டுபவன் இறைவனே!
இப்தார்: மாலை 6:36 மணி நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:24 மணி