பதிவு செய்த நாள்
13
மே
2020
05:05
வழிகாட்டுகிறார் வள்ளுவர்
* உலகத்தை வசப்படுத்த விரும்பினால் ஏற்ற காலம், தக்க இடத்தை அறிந்து செயல்பட வேண்டும்.
* கல்வி ஒன்றே அழியாத செல்வம். மற்றவை அனைத்தும் அழிந்து விடும்.
* எந்தப் பொருள் மீது ஒருவனுக்கு ஆசை இல்லையோ அதனால் எந்த துன்பமும் ஏற்படாது.
* பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொற்களைத் தவிர்ப்பதே தர்ம வாழ்வின் அடிப்படைகள்.
* பணத்தைக் கொண்டு பிறருக்கு உதவாமல், அதன் மீதுள்ள ஆசையால் செல்வம் சேர்ப்பவன் அதை இழப்பான்.
* சாப்பிட்ட உணவு செரித்த பின், பசித்து உண்பவனுக்கு மருந்தே தேவைப்படாது.
* மருத்துவர் என்பவர் நோய் இன்னது, அதற்கான காரணம் எது என்பதை அறிந்து அதை போக்குவதில் தவறு நேராமல் விழிப்பாக இருக்க வேண்டும்.
* நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருத்துவ முறைகள் நான்கு வகைப்படும்.
* செயலில் உறுதி என்பது ஒரு செயலை நடைமுறைப்படுத்துபவரின் மனதில் இருக்கும் உறுதித்தன்மையே ஆகும்.
* கடைசி வரை தளராமல் முயற்சியில் ஈடுபடுவதே சிறந்த ஆளுமை. இடையில் தளர்ச்சி ஏற்பட்டால் அது துன்பத்தில் முடியும்.
* நடுவுநிலையுடன் வாழ்பவரின் செல்வம் அழியாமல் பல தலைமுறைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
* வீரம் மிக்க போர்ப்படை, நாட்டுப்பற்று உள்ள குடிமக்கள், குறையாத உணவு, சிறந்த அமைச்சர்கள், துன்பத்தில் உதவும் அண்டை நாட்டார் நட்பு, அழிக்க முடியாத காவல் ஆகிய ஆறும் கொண்ட நாடே வலிமை மிக்கது.
* பகைவருக்கு அஞ்சாமை, வறியவருக்கு உதவுதல், வரும் முன் காத்தல், ஆபத்து காலத்தில் மனம் தளராமை ஆகியவை ஆட்சியாளர்களின் இயல்பாக இருக்க வேண்டும்.