கண்டிப்பாக வரும். நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் மறக்காமல் இறைவனை வேண்டிக் கொள்கிறோம். நல்லது நடந்தபின் மறந்துவிட்டேன் என்று சொல்வதே சரியாயில்லையே! வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு பிறகு மறந்துவிடுவது என்பது- ஆன்மிகவாதிகள் சமூகத்தில் கூடாதே!! ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தெய்வம் உங்களிடம் எதுவும் கேட்பதில்லை. நீங்களாக வேண்டிக் கொள்கிறீர்கள். பிறகு மறந்துவிட்டேன் என்றால் அது தெய்வ குற்றம் தானே?