பதிவு செய்த நாள்
14
மே
2020
11:05
ஈரோடு: சித்திரை திருவோணத்தை முன்னிட்டு, ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள, உற்சவர் தில்லை நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு முறை, சித்திரை திருவோண நட்சத்திரம், ஆனி உத்திர நட்சத்திரம், மார்கழி திருவாதிரை நட்சத்திரம், ஆவணி சதுர்த்தி, புரட்டாசி சதுர்த்தி, மாசி சதுர்த்திதி ஆகிய காலங்களில் சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, சித்திரை மாத திருவோண நட்சத்திர அபிஷேகம் நேற்று காலை, கோவில் வளாகத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் நடந்தது. பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களில் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பக்தர்கள் யாரும் இல்லாமல், சிவாச்சாரியார்கள் இருவர் மட்டுமே அபிஷேகத்தை நடத்தினர்.