திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில், ஏழுமலையானுக்கு நிவேதனமாக சமர்ப்பிக்கப்படும் பெரிய லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்கள், நேற்று முன்தினம் முதல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்களின் வரவேற்பு அதிகம் உள்ளதால், தேவஸ்தானம், இன்று முதல், சிறிய லட்டின் விற்பனையையும் துவக்க முடிவு செய்து உள்ளது.பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, வரிசையில் காத்திருந்து, லட்டு பிரசாதத்தை வாங்கி செல்லுமாறு, தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.