தர்ப்பணம் என்பது சூரியன், சந்திரன் போன்ற அனைத்து தேவர்களுக்கும் நாம் நன்றி சொல்லி அவர்களுக்கு உணவு அளித்து அவர்களுது ஆசிர்வாதம் பெறுவது. நதி ஓரம் அமாவாசை அன்று காலையில் அந்தணர்களை வைத்து நாம் நமது முன்னோர்கள் பெயர், திதி போன்றவை கூறி பூஜை செய்து இரு கைகளால் அவர்கள் தரும் அரிசியை நதியில் கரைத்து தேவர்களை வணங்குவது தர்ப்பணமாகும் . இப்படி செய்வது நமக்கு அவர்களின் ஆசிர்வாதம் நேரடியாக பெறமுடியும்.
நம் முன்னோர்கள் இறந்த நாளின் திதி அறிந்து வருடத்தில் ஒரு நாள் வீட்டிலேயே அந்தணரை வரவழைத்து மந்திரங்கள் ஒத செய்யப்படுவது தவசம் எனப்படுகிறது. அமாவாசை மற்றும் அவர்கள் இறந்த திதியில் பூமியை நோக்கி வருவார்கள் என்று அர்த்தம். ஆகையால் அவர்கள் பசியோடு வருவதை நாம் தவசம் செய்து அவர்களுக்கு படையல் படைக்க வேண்டும். இப்படி செய்தால் பிதுரு தோஷம் நமக்கு மற்றும் நம் சந்ததிகளுக்கு வராது.