புதுச்சேரி; புதுச்சேரியில் வரும் ஜூன் 1 முதல் கோவில்கள் மற்றும் திருமண நிலையங்களை திறக்க அரசு முன் வரவேண்டும் பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கை:தமிழகத்தில் வரும் 1ம் தேதி முதல் கோவில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.புதுச்சேரியில் 60 நாட்களாக மூடியுள்ள கோவில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்து அறநிலையத் துறை, காங்., கட்சி போல செயல்படுகிறது. ஆனால் பலமுறை அமைச்சரவை கூட்டம் நடத்தி, மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.புதுச்சேரியில் சமூக பரவல் இல்லை என்று கலெக்டர் அறிவித்துள்ளார். ஆகையால் வரும் 1ம் தேதி முதல் கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள், திருமண நிலையங்களை திறந்து, விதிமுறைகள் பின்பற்றலோடு நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும்இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.