Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கோயில்களில் பக்தர்களை அனுமதிக்க ... திருப்பரங்குன்றத்து யானை இன்று முகாம் புறப்பாடு திருப்பரங்குன்றத்து யானை இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்மேன் வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு
எழுத்தின் அளவு:
காட்மேன் வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
11:06

 சென்னை : எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து காட்மேன் வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்துவதாக ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெய்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் நடித்துள்ள வெப்சீரிஸ் காட்மேன். இதை தமிழரசன் படத்தின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கி இருந்தார். ஜீ5 ஓடிடியில் ஜுன் 12ல் வெளியிட இருந்தனர். அதற்கு முன்பாக இதன் டீசர் கடந்தவாரம் வெளியானது. அதில் இந்து கடவுள் நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும், பிராமண சமூகத்தை இழிவுப்படுத்தி வசனங்களும், ஆபாச காட்சிகள் நிறைந்தும் இருந்தது சர்ச்சையானது.

இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இந்த தொடரை தடை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட இதன் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஜீ5 மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதற்கிடையே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட போலீசார், காட்மேன் தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். இந்நிலையில் ஜீ5 நிறுவனம் டுவிட்டரில், எங்களின் காட்மேன் வெப்சீரிஸ் தொடர்பாக நிறைய கருத்துக்கள் வந்தன. அதன்காரணமாக இந்த தொடரின் வெளியீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். எந்த ஒரு மதம், சமூகம் மற்றும் தனிப்பட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எங்களின் ஜீ5 நிறுவனத்திற்கோ, தயாரிப்பாளருக்கோ கிடையாது என பதிவிட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar