ராமேஸ்வரம்: கோயில்களை திறக்க கோரி ராமேஸ்வரத்தில் இந்து மக்கள் கட்சியினர் அங்கபிரதட்சணம் செய்து போராட்டம் செய்தனர்.
மார்ச் 24 முதல் கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தி பல மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் திறந்த நிலையில், தமிழகத்தில் கோயில்கள் திறக்க அரசு முன்வராதது பக்தர்களிடம் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழக அரசு கோயில்களை திறக்க கோரி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மேற்கு வாசல் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ரதவீதியில் அங்கபிரதட்சணம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பிரபாகரன், செயலர் குருசர்மா, நகர் செயலர் நம்புகார்த்திக், நகர் பொறுப்பாளர்கள் நம்பு, மாரீஸ்வரன் பலர் பங்கேற்றனர்.