பதிவு செய்த நாள்
10
ஜூன்
2020
04:06
அவிநாசி: கோவில்களை திறக்கக்கோரி, ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டத்தை, இந்து முன்னணியினர் நடத்தினர். இந்து முன்னணி, திருப்பூர் மாநகர் மாவட்டம், அவிநாசி நகர அமைப்பினர் சார்பில், அவிநாசி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றியுள்ள,10க்கும் மேற்பட்ட கோவில்கள், இந்து முன்னணியினர், ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்யும் நூதன போராட்டம் நடத்தினர். இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், தலைமை வகித்தார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் கேசவன் முன்னிலை வகித்தார். நகர துணைத்தலைவர் மணி, நகர செயலாளர்கள் சூர்யா, பால பிரசாத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இளைஞர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். இதில், கோவில்களை திறந்து, வழிபாடு நடத்த வேண்டும்; கோவில் நிதியில், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன.