பதிவு செய்த நாள்
12
மே
2012
11:05
சென்னை: இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோரை தேர்வு செய்ய, வரும், 15ம் தேதி, குலுக்கல் நடக்க உள்ளது. தமிழக அரசின் செய்திக்குறிப்பில், ""இந்த ஆண்டு (2012) ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள, தமிழகத்தில் இருந்து, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், மாநில ஹஜ் குழுவுக்கு வந்துள்ளன. ஆனால், தமிழகத்துக்கான ஒதுக்கீடு, 3,000 மட்டுமே. எனவே, மத்திய ஹஜ் குழுவின் அறிவுரைப்படி, பயணிகளை தேர்வு செய்ய, குலுக்கல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும், 15ம் தேதி பிற்பகல், 3.00 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் குலுக்கல் நடக்கும். விண்ணப்பித்தவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும், என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.