பதிவு செய்த நாள்
12
மே
2012
11:05
திண்டுக்கல்: கோயில்களில் கொள்ளை நடக்காமல் தடுக்க, பாதுகாப்பு போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு முடிவு செய்துள்ளது. கோயில்களில் உண்டியல், சிலை திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. கோயில் பாதுகாப்பிற்காக, தனி போலீசார் நியமிக்கப்பட்டும் கொள்ளையை தடுக்க முடியவில்லை. போலீசார் எண்ணிக்கை குறைவே இதற்கு காரணம். பணியில் உள்ளவர்களும், கோயில் பாதுகாப்பை தவிர, சட்டம் ஒழுங்கு பிரச்னை, பாதுகாப்பு என, அனுப்பப்படுகின்றனர். இதை தவிர்த்து, கோயில் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக காலியிடங்கள், தேவைப்படும் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.மேலும், இந்த போலீசாரை வேறு பணிக்கு பயன்படுத்தக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.