சிவகாசி:சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழாவை யொட்டி தேரோட்டம் நடந்தது .சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா 10 நாட்கள் நடந்தது. தினமும் மண்டகபடிகளில் எழுந்தருளிய அம்மன், பல்வேறு வாகனங்களில்வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆறாம் விழாவில் நவதானிய வர்த்தகர்கள் அலங்கார கொட்டை கல்மண்டபத்தில் வீற்றிருந்தார். அன்று சிவகாசி சுற்று கிராம மக்கள் அம்மனை தரிசித்தனர். அம்மனுக்கு பக்தர்கள் அக்னிசட்டி, கயர் குத்தி, முடி, முத்து காணிக்கை, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் நிறைவாக நேற்று மாலை தேர் திருவிழா துவங்கியது. அம்மன் தேரில் எழுந்தருள, அதன் முன்பாக விநாயகர் வீற்றிருந்த சிறிய தேரை பக்தர்கள் இழுந்து சென்று நிலைக்கு கொண்டு வந்தனர். அதன் பின் பெரிய தேரை ÷மளதாளம் முழுங்க இழுந்தனர். சில அடி தூரம் நகர துவங்கியதும் மழை பெய்தது. சிறிதுநேர இடைவெளிக்கு பின் பக்தர்கள் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.