தற்போது அரசு விலையில்லா ஆடு தருகிறதல்லவா! அக்காலத்தில், தமிழ் புத்தாண்டு அன்றும் செல்வந்தர்கள் ஏழைகளுக்கு ஆடு தானம் செய்தனர். சித்திரையில் ஆடுதானம் செய்தால் ஆண்டு முழுவதும் சூரியன் அருளால் ஆரோக்கியம் நிலைக்கும் என்பர். இதுதவிர, படுக்கை, ஆசனம் போன்றவற்றையும் தானம் செய்யலாம் என பத்மபுராணம் கூறுகிறது.