குருவாயூர் கோயிலுக்கு புத்தாண்டுக்கு முதல்நாள் இரவே பக்தர்கள் சென்று காத்திருப்பார்கள். அதிகாலை நடை திறந்ததும் குருவாயூரப்பனைத் தரிசிப்பர். அப்போது ஏழை, பணக்காரர் என்ற பேதமில்லாமல் அனைவருக்கும் கைநீட்டமாக கோயில் சார்பாக காசு வழங்குவர். இதற்கு கைநீட்டம் என்று பெயர். புத்தாண்டு அதிகாலையில் விஷூ கனி தரிசனம் செய்த பின், வீட்டு பெரியவர்களும் இளையவர்களுக்கு பணம் கொடுக்கலாம். இந்தக் காசை அநாவசியமாக செலவழிக்காமல் தர்மகாரியங்களுக்கும், கோயில்களுக்கும் செல்லவும் பயன்படுத்துவது புண்ணியம் தரும்.