ஒரு மண்டலம் என்பது 48 என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அது 45 நாட்களைத் தான் குறிக்குமென சாத்திரங்கள் கூறுகின்றன. மூன்று பட்சங்கள் கொண்டது ஒரு மண்டலம் என்பது நியதி. பட்சம் என்பது பிரதமை முதல் அமாவாசை அல்லது பவுர்ணமி வரையான 15 நாட்கள். இது வழிபாட்டு ரீதியான விஷயம். ஒரு மண்டல விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடக்கும். சித்த மருத்துவப்படி, மண்டலத்திற்கு 48 நாட்கள். என்ற கணக்கு உண்டு. அதுவே காலப்போக்கில் வழிபாட்டிற்கும் மாறி விட்டது. சபரிமலையில் மண்டல காலமாக 41 நாட்கள் மட்டுமே வைத்துள்ளனர்.