தேனி:வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நேற்று தொடங்கியது.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழா கடந்த மே 8ம் தேதி முதல் நடந்து வருகிறது. விழா தொடங்கி நான்காம் நாளான நேற்று அம்மன் தேரோட்டம் தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதற்காக தேர் மற்றும் தேர் செல்லும் வீதிகளுக்கு பொதுப்பணித்துறையிடம் உறுதிதன்மை சான்று பெறப்பட்டது. தேருக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டது.நேற்று மாலை 5 மணிக்கு கலெக்டர் பழனிசாமி, எஸ்.பி., பிரவீண்குமார் அபினபு, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பச்சையப்பன், கோயில் செயல் அலுவலர் சுரேஷ் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டது. சனி, ஞாயிறு இரண்டு நாளும் ரதவீதிகளின் வழியாக உலா வரும் தேர், திங்கள் கிழமை மீண்டும் நிலை நிறுத்தப்படும்.