Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மேஷம்: தம்பதி ஒற்றுமை மேஷம்: தம்பதி ஒற்றுமை மிதுனம்: ஆடம்பர வசதி மிதுனம்: ஆடம்பர வசதி
முதல் பக்கம் » ஆடி ராசிபலன் (16.7.2020 முதல் 16.8.2020 வரை)
ரிஷபம்: குடும்ப மகிழ்ச்சி
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2020
21:33

முக்கிய கிரகங்களில் சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தருவார். செவ்வாய் ஜூன் 18ல் கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார். திருட்டு பயம் இனி இருக்காது. செயலில் அனுகூலம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  குரு 9ம் இடத்தில் இருப்பது மிக உயர்வான நிலை. குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.  தேவைகள் பூர்த்தியாகும். அவர் ஜூலை 8ல் அதிசார நிவர்த்தி அடைந்து 8ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல.  குருபகவான் பொதுவாக மனவேதனையும், நிலையற்ற தன்மையும் கொடுப்பார்.வீண் விரோதத்தை உருவாக்குவார். ஆனால் அவரது 7-ம் இடத்து பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும்.

சூரியன், புதன் 2ம் இடத்தில் இருப்பதால் சிலர் வீண் அவப்பெயருக்கு ஆளாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் கவலை வரலாம். பொருள் விரயம் ஏற்படலாம்.
குடும்பத்தில் பெண்கள் உதவிகரமாக இருப்பர். பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். ஜூன் 17க்கு பிறகு புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். உறவினர்கள் வகையில்  சற்று ஒதுங்கி இருக்கவும். பெண்கள் குதுாகலமான வாழ்வு அமையப் பெறுவர். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். கணவர், குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஜூன் 17க்கு பிறகு அக்கம் பக்கத்தினர் தொல்லை மறையும். பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். .புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் அதிக வருமானத்தை பெறுவர். உடல்நலம் சீராக இருக்கும். ஆனால் கண் தொடர்பான பிரச்னைகள் வரலாம்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு, பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் மூலம் நல்ல லாபத தரும்.
* வியாபாரத்தில் தங்கம், வெள்ளி, வைரம் வியாபாரிகள் ஜூலை 7 வரை அதிக வருமானத்தைக் காண்பர்.
* ஆசிரியர்களுக்கு ஜூலை 7 வரை  திறமை பளிச்சிடும். கோரிக்கைகள் நிறைவேறும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும் .முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம்
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஜூன்17க்கு பிறகு முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும்.  அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.
* ஐ.டி., துறையினருக்கு வளர்ச்சி காத்திருக்கிறது. சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
* அரசியல்வாதிகள் ஜூன் 17க்கு பிறகு வளர்ச்சி காண்பர். புதிய பதவி கிடைக்க பெறுவர்.
* பொதுநல சேவகர்கள் செல்வாக்குடன் திகழ்வர். எதிர்பார்த்த பார்த்த பதவி கிடைக்கும்.
* கலைஞர்கள் ரசிகர்களின் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.புதிய ஒப்பந்தங்கள் கையழுத்தாகும்.
* விவசாயிகள்  கேழ்வரகு, மஞ்சள், பழவகைகள், காய்கறிகள் போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். ஜூன் 17க்கு பிறகு புதிய சொத்து வாங்க காலம் கனிந்து வரும். வழக்கு விவகாரங்களில் முடிவு சாதகமாக அமையும்.
கால்நடை வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர்.
* பள்ளி,கல்லுாரி மாணவர்கள் உற்சாகத்தை வரவழைத்துக் கொள்வது நல்லது. இருப்பினும் குருவால்ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும்.

சுமாரான பலன்கள்
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* மருத்துவர்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும். அதிக சிரத்தை எடுத்தால் தான் கோரிக்கைகள் நிறைவேறும்.
* வக்கீல்களுக்கு விடாமுயற்சி  இருந்தால் மட்டும் தான் புதிய வழக்குகள் கிடைக்கும்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் ஜூன் 21ல் இருந்து ஜூலை3 வரை வேலையில் கவனமுடன் இருக்கவும்.வேலைபளு சற்று அதிகமாக இருந்தாலும், அதற்கேற்ப நன்மை காண்பீர்கள்.  அதிகாரிகளுடன் அனுசரித்து போவது நல்லது. .
* வியாபாரம் பகைவர் தொல்லை, அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு முதலியன ஜூலை3 க்கு பிறகு மறையும். அதுவரை வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* தரகு,கமிஷன் தொழில் சிறுசிறு தடைகள் வரலாம்.பண விரயம் ஆகலாம்.

நல்ல நாள்:  ஜூன் 15,19,20,23,24,25,30 ஜூலை 1,2,3,9,10,11,12,13
கவன நாள்:  ஜூலை 4,5 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,5  நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு
* ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசிமாலை

 
மேலும் ஆடி ராசிபலன் (16.7.2020 முதல் 16.8.2020 வரை) »
temple
பொறுப்புடன் பணியாற்றும் மேஷ ராசி அன்பர்களே! சுக்கிரன், குரு, ராகு தொடர்ந்து முன்னேற்றத்தை ... மேலும்
 
temple
தகுதியுடன் செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே! பொருளாதார வளம் பெருகும் மாதம் இது அமையும். சூரியன், ... மேலும்
 
temple
பொறுமையில் சிறந்த மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் குருவால் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். ... மேலும்
 
temple
கடமையில் ஆர்வம் மிக்க கடக ராசி அன்பர்களே!  சனி, கேதுவால் தொடர்ந்து நற்பலனை எதிர்பார்க்கலாம். மற்ற ... மேலும்
 
temple
சிந்தித்து செயலாற்றி வரும் சிம்ம ராசி அன்பர்களே! குரு, ராகு மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பர். புதன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.