Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மீனம்: போட்டியில் வெற்றி மீனம்: போட்டியில் வெற்றி ரிஷபம்: குடும்ப மகிழ்ச்சி ரிஷபம்: குடும்ப மகிழ்ச்சி
முதல் பக்கம் » ஆடி ராசிபலன் (16.7.2020 முதல் 16.8.2020 வரை)
மேஷம்: தம்பதி ஒற்றுமை
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2020
21:29

இந்த மாதம் கூடுதல் நற்பலனை எதிர்பார்க்கலாம் காரணம் சூரியன் சாதகமான இடத்திற்கு வந்துள்ளார். முக்கிய கிரகங்களில் 2ல் இருக்கும் சுக்கிரன், 3ல் இருக்கும் ராகு தொடர்ந்து நன்மை தருவார்கள். செவ்வாய் ஜூன் 18 வரை கும்பத்தில் இருந்து முன்னேற்றத்தைக் கொடுப்பார். அதன் பிறகு மீனத்திற்கு மாறுவதால் நன்மை தர மாட்டார்.

குரு 10ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. ஆனால் அவர் ஜூலை 8ல் அதிசார நிவர்த்தி அடைந்து 9ம் இடமான தனுசு ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். துன்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமுடன் செயல்படுவீர்கள். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. இது தவிர குருவின் 9ம் இடத்துப் பார்வை சிறப்பாக இருக்கும். இதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும்.

குடும்பத்தில் பொருளாதார வளம் மேம்படும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.  ஜூன் 21 –  ஜூலை 3 வரை செல்வாக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். பெண்கள் சீரான முன்னேறம் காண்பர்  கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.  சமூகத்தில் மரியாதை உயரும்.   சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். பணியிடத்தில் பெண்கள் தங்கள் கோரிக்கைகளை ஜூன் 18க்குள் கேட்டு பெறவும். உடல் நலம் சிறப்படையும். கண்வலி  தொடர்பான பிரச்னை குணம் அடையும்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். லாபம் படிப்படியாக உயரும். பொன், பொருள் சேரும்.
* வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். ஜூலை 8க்கு பிறகு தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் வருமானம் காண்பர்.
* ஐ.டி. துறையினர் சுக்கிரனால் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். புதிய பதவி தேடி வரும்.
* ஆசிரியர்களுக்கு ஜூலை 8க்கு பிறகு வேலைப்பளு குறையும். கோரிக்கை நிறைவேறும். வேலையில் திருப்தி ஏற்படும்.  யாருடைய உதவியை எதிர்பார்க்காமல் எதையும் சாதிக்க முடியும்.
* அரசுப்பணியாளர்கள் சீரான முன்னேற்றம் பெறுவர்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.
* பொதுநல சேவகர்கள் மக்கள் மத்தியில் அந்தஸ்துடன் திகழ்வர்.
* கலைஞர்கள் சுக்கிரனின் பலத்தால் முன்னேற்றம் காண்பர். விரும்பியபடி விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
* விவசாயிகள்  நற்பலன் கிடைக்கப் பெறுவர். குறிப்பாக நெல், மஞ்சள் சோளம், மானாவாரி பயிர்கள் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். கோழி,ஆடு வளர்ப்பில் அதிக வருமானம் காண்பர்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஜூலை 8க்கு பிறகு ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று முன்னேறுவர்.

சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஜூலை 3க்கு பிறகு புதனால் அரசு வகையில் பிரச்னை வரலாம். சிலர் திடீர் சோதனைக்கு ஆளாகலாம். எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* தரகு,கமிஷன் தொழிலில் தடைகள் வரலாம். சிலர் திடீர் பண விரயத்திற்கு ஆளாவர்.
*  அரசு பணியாளர்கள்  ஜூலை 3க்கு பிறகு சற்று கவனமாக இருக்கவும். சிலர் வேலை விஷயமாக வெளியூர் செல்வர்.
*  மருத்துவர்கள் முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
*  வக்கீல்கள் அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே புதிய வழக்குகள் ஒப்பந்தமாகும். .
* அரசியல்வாதிகளுக்கு ஜூன்18க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.
* விவசாயிகள் பச்சை,கறுப்பு நிற தானியங்கள் பயிரிடுவதை தவிர்க்கவும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

நல்ல நாள்: ஜூன் 16,17,18,21,22,28,29,30 ஜூலை 1,6,7,8,9,10,14,15
கவன நாள்: ஜூலை 2,3 சந்திராஷ்டமம்:
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: சிவப்பு, வெள்ளை

 பரிகாரம்:
* சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு அர்ச்சனை
* தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு
* செவ்வாயன்று முருகப்பெருமானுக்கு விரதம்.

 
மேலும் ஆடி ராசிபலன் (16.7.2020 முதல் 16.8.2020 வரை) »
temple
பொறுப்புடன் பணியாற்றும் மேஷ ராசி அன்பர்களே! சுக்கிரன், குரு, ராகு தொடர்ந்து முன்னேற்றத்தை ... மேலும்
 
temple
தகுதியுடன் செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே! பொருளாதார வளம் பெருகும் மாதம் இது அமையும். சூரியன், ... மேலும்
 
temple
பொறுமையில் சிறந்த மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் குருவால் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். ... மேலும்
 
temple
கடமையில் ஆர்வம் மிக்க கடக ராசி அன்பர்களே!  சனி, கேதுவால் தொடர்ந்து நற்பலனை எதிர்பார்க்கலாம். மற்ற ... மேலும்
 
temple
சிந்தித்து செயலாற்றி வரும் சிம்ம ராசி அன்பர்களே! குரு, ராகு மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பர். புதன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.