பதிவு செய்த நாள்
12
மே
2012
12:05
உடுமலை:உடுமலை கல்பனா ரோடு காளியம்மன் கோவிலில்,கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று பூர்வாங்க பூஜைகள் நடந்தன.<உடுமலை கல்பனா ரோட்டில், பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 1999ம் ஆண்டு நடந்தது. 11 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையரிடம் உரிய அனுமதி பெறப்பட்டது.இதனையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு செப்.,4ம் தேதி பாலாலயம் நடந்தது. பின், கோவில் புனரமைப்பு பணிகள், மகாமண்டபம், அம்மன் சன்னதிக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளதால், கும்பாபிஷேக விழா வரும் 16ம் தேதி நடக்கிறது. இதற்காக யாக சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை யொட்டி, நேற்று கோவிலில், பூர்வாங்க பூஜைகள் நடந்தன. காலை 8.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்யாகவாசனம், பஞ்சகவ்யம் உள்ளிட்ட பூஜைகள் இடம்பெற்றன. கணபதி ஹோமம், சரஸ்வதி, துர்கா, லட்சுமி ஹோமங்களும்; பூர்ணாகுதி, மகா தீபாராதனையும் நடந்தது. கும்பாபிஷேகம் வரும் 14ம் தேதி யாக பூஜை களுடன் துவங்குகிறது.