பதிவு செய்த நாள்
12
மே
2012
12:05
உடுமலை:உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், குருப்பெயர்ச்சி விழா வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலில், குருப்பெயர்ச்சி மகா யாகம் மற்றும் ஏகதின லட்சார்ச்சனை பெருவிழா வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி, காலை 7.00 மணிக்கு கலச ஸ்தாபிதம், கணபதி ஹோமம், லட்சார்ச்சனை ஆரம்பம்; மதியம் 2.00 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு, மாலை 4.00 மணிக்கு 108 வலம்புரி சங்கு ஸ்தாபிதம், சங்கு பூஜை, கணபதி ஹோமம், மிருத்ஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாலை 6.00 மணிக்கு பூர்ணாகுதி, மாலை 6.15 மணிக்கு குருபகவானுக்கும் மற்றும் நவக்கிரகங்களுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் அபிஷேகம், மாலை 6.45 மணிக்கு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.
மானுப்பட்டி: உடுமலை அருகே மானுப்பட்டி துர்கா அருள் மையத்தில், குருப்பெயர்ச்சிவிழா வரும் 17ம் தேதி மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது. விழாவையொட்டி, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை வேள்வி, கிரக தோஷ நிவர்த்தி, திருமணத்தடை நீங்க சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.