பதிவு செய்த நாள்
19
ஜூன்
2020
12:06
திருப்பதி: காளஹஸ்தீஸ்வரன் கோவிலில் கடந்த, 85 நாட்களுக்கு பின் ரா கு-கேது பரிகார பூஜைகள் நேற்று முன்தினம் முதல் துவங்கப்பட்டது. ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி
கோவில், 85 நாட்கள் பொது முடக்கத்திற்கு பின் மீண்டும் நேற்று முன்தினம் முதல் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டது.
ஆந்திர அரசு அனுமதி அளித்த பின் கடந்த 8ம்தேதி கோவிலை திறக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால், காளஹஸ்தீஸ்வரன் கோவிலில் பணிபுரியும் குருக்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோவில் மூடப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. கிருமிநாசினியால் சுத்தப்படுத்தி, கோவில் ஊழியர்கள், குருக்கள், அர்ச்சகர்கள், கடை வைத்திருக்கும் வியாபாரிகள் என அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதனால் கோவிலில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின், கடந்த ஜூன், 15ம் தேதி கோவில் ஊழியர்களுடன் கோவில் நிர்வாகம் தரிசன வெள்ளோட்டம் நடத்தியது. அதன்பின்னர் ஜூன், 16ம் தே தி உள்ளூர்வாசிகள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களை தொடர்ந்து நே ற்று முன்தினம் முதல் சாதாரண பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம், 1255 பக்தர்கள் காளஹஸ்தீஸ்வரனையும், ஞானபிரசுனாம்பிகை அம்மனையும் தரிசனம் செய்தனர். 34 பேர் ராகு-கேது பரிகார பூஜை செய்து கொண்டனர். ராகு-கேது பூஜையில் கலந்து கொண்டவர்கள் தனித்தனியாக அமர்ந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, முகத்தில் முககவசம் அணிந்து கலந்து கொண்டனர். தினசரி காலை, 6மணிமுதல் மாலை, 6மணிவரை மட்டுமே தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தரிசனத்திற்கு வருபவர்களுக்கு கோவில் நிர்வாகம் ஆதார் அட்டையை கட்டாயமாக்கியுள்ளது.