தேனி:வீரபாண்டி திருவிழாவில் பக்தர்கள் நெரிசல் அதிகம் உள்ளதால், கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழா நாளையுடன் நிறைவு பெறுகிறது. மே 8ல் திருவிழா தொடங்கியது முதல் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. மே 11 முதல் ராட்டினங்களும் இயங்க தொடங்கியதால் கூட்டம் அதிகரித்துள்ளது. தினமும் லட்சம் பேருக்கும் அதிகமாக கூடுவதால் நெரிசல் அதிகரித்துள்ளது. வீரபாண்டி கோயிலில் இருந்து, இரு புறமும் பஸ்ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட்டுள்ள இடம் வரை நெரிசல் காணப்படுகிறது. இதனால் போக்குவரத்தை சீரமைக்க முடியாமல், போலீசார் சிரமப்படுகின்றனர். சட்டம்- ஒழுங்கு, திருட்டு, ஈவ்டீசிங் குற்றங்களை தடுப்பதில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.