திருப்பூர்: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: இந்துக்களை ஒற்றுமைப்படுத்த விநாயகர் சதுர்த்தி விழா, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொரோனா மக்களை அச்சப்படுத்தி வருகிறது. கொரோனாவை விரட்டியடிக்க, அரசு உத்தரவை பின்பற்றி, மிக எளிமையாக விநாயகர் சதுர்த்தி விழா நடக்க உள்ளது. தமிழகம் முழுவதும், 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். விசர்ஜன ஊர்வலம், பொதுக்கூட்டம் கிடையாது. சீனா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள நம் நாட்டு பகுதிகளை மீட்க வேண்டும். சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.