பதிவு செய்த நாள்
02
ஜூலை
2020
01:07
ஈரோடு: ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், 1,200 ஆண்டுகள் பழமையானது. 800 ஆண்டுகள் பழமையான வன்னிமரம், ஸ்தல விருட்சமாக உள்ளது. நடராஜர் சன்னதி, வாரணாம்பிகை அம்மன், 63 நாயன்மார்கள், சனி பகவான், காலபைரவர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன, ஆண்டுதோறும் வைகாசி தேரோட்டம், குருபெயர்ச்சி விழா, 63 நாயன்மார்கள் குருபூஜை, அன்னாபிஷேகம், ஆனி திருமஞ்சனம், சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட விழாக்கள் விமர்சையாக நடக்கும். கடந்த, 2008ல் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்து இந்தாண்டு நடைபெற வேண்டும். அதற்கான ஆயத்த பணி, 2019 நவம்பரில் தொடங்கியது. ராஜ கோபுரத்துக்கு வர்ணம் தீட்டுதல், புதிய கொடிமரம் நிறுவுதல், மூலவர் மண்டபம், வசந்த மண்டபம் செப்பனிடுதல், மண்டப கூரைகளில் சிற்பங்கள் வரைதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. கோவில்கள் திறக்கும் போது, கும்பாபி ?ஷகம் நடத்தும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஈரோடு அருள்நெறி திருக்கூட்ட அறக்கட்டளையினர் பணிகளை செய்து வருகின்றனர்.