பதிவு செய்த நாள்
05
ஜூலை
2020
02:07
திருவாரூர்: ஞானபுரீ ஸ்ரீ மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மை வேண்டி, இன்று சிறப்பு பூஜை துவங்குகிறது. இதில், ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகாசுவாமிகள், சாதுர்மாஸ்ய விரதானுஷ்டம் மேற்கொள்கிறார்.
திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி குரு ஸ்தலத்தை அடுத்துள்ள, திருவோணமங்கலத்தில் ஸ்ரீ ஞானபுரீ சித்திரகூட ஷேத்திரம் ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர், இடுப்பில் சஞ்சீவி மூலிகைகளான மிருத சஞ்சீவினி, விசல்ய கரணீ, ஸாவர்ண கரணீ, ஸந்தான கரணீ ஆகியவற்றுடன் அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேயருக்கு வலதுபுறம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், இடதுபுறம் கோதண்டராமர் உள்ளனர். இங்கு பிப்., 7 ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்புமிக்க கோவிலில், ஜகத்குரு பத்ரி சங்கராச்சாரியார், சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யாபீடம், ஸ்ரீ வித்யாபினவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணாநந்த, தீர்த்த மகா சுவாமிகள் இன்று, ?ம் தேதி முதல் செப்டம்பர், 2ம் தேதி வரை, சாதுர்மாஸ்ய விரதானுஷ்டம் மேற்கொள்கிறார். அப்போது உலக நன்மை வேண்டி பல்வேறு, பூஜை செய்கிறார். ஏற்பாடுகளை, ஜகத்குரு பத்ரி சங்கராச்சாரியார் சமஸ்தான, ஸ்ரீகாரியம் சந்ரமௌலிஸ்வரர், தலைமையிலான ஸ்ரீஸ்ரீ ஜகத்குரு சாதுர்மாஸ்ய, விரத சேவா ஸ்மிதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். ஊரடங்கு அமலில் உள்ளதால், பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டு, ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகளின், அருளை பெறுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.