ராசிபுரம்: ராசிபுரத்தில், பெரியாண்டிச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ராசிபுரம், நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் பூசாரிகள் சார்பாக, ஏரிக்காடு பெரியாண்டிச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பூசாரிகள் மற்றும் பூசாரிகள் குடும்பத்தார், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். உலக நன்மைக்காகவும், மக்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து விடுபட்டு செல்வ செழிப்போடு இருக்கவும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இந்த சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பிறகு அனைவருக்கும் தீபாராதனை காட்டப்பட்டு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.