நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2020 02:07
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் சித்தருக்கு பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் உள்ள எருக்கம்பால் சித்தர் மற்றும் பச்சைகேந்திர கந்த சுவாமிகளுக்கு பவுர்ணமி மற்றும் அமாவாசையை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று மதியம் 12:00 மணிக்கு சித்தருக்கு சிறப்பு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது.